1
அமெரிக்கா – மினியெப்போலிஸ் நகரிலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி புலனாய்வு அதிகாரிகள்வெளியிட்டுள்ள சில தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள 23 வயது ரோபின் வெஸ்ட்மனின் என்ற இளைஞனின் மனத்தில் சிறுவர்களைக் கொல்லும் நோக்கம் ஆழமாகப் பதிந்திருந்ததாக அதிகாரிகள் கூறினர்.
ரோபின் வெஸ்ட்மன் துப்பாக்கிச்சூட்டில் 8 வயது மற்றும் 10 வயது நிரம்பிய பாடசாலை மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.
சம்பவத்தில் பத்துக்கு மேற்பட்ட ஆசிரியர்களும் பிள்ளைகளும் காயமடைந்தனர்.
தேவாலயத்தின் ஜன்னல்வழி அவர் மாணவர்களைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
வெஸ்ட்மனிடம் வெறுப்புணர்வு இருந்ததோடு, தமது பெயர் பிரபலமாக வேண்டும் என்ற ஆசையும் இருந்ததாய் விசாரணையில் தெரியவந்துள்ளது.