• Thu. Jan 16th, 2025

24×7 Live News

Apdin News

24 அக்பர் சாலை: காங்கிரஸ் கட்சியின் எழுச்சி மற்றும் வீழ்ச்சிக்கு சாட்சியாக இருந்த தலைமையகம்

Byadmin

Jan 16, 2025


காங்கிரஸ் தலைமையகம், புது டெல்லி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காங்கிரஸ் தலைமையகம் இனி 24 அக்பர் சாலைக்கு பதிலாக கோட்லா சாலையில் இருந்து செயல்படும்

ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.வெங்கடசாமிக்கு ஒதுக்கப்பட்ட டைப்-7 பங்களா இது. கடந்த 1978இல் காங்கிரஸ் பிளவுபட்டபோது இந்திரா காந்தியை ஆதரிக்க முடிவு செய்த சிலரில் வெங்கடசாமியும் ஒருவர்.

இந்திரா காந்திக்கு, 1977ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்த பிறகு தங்க இடமில்லாமல் போனது. ஒரு காலத்தில் அவருக்கு உதவியாளராக இருந்த முகமது யூனுஸ் அந்த நேரத்தில் 12 வில்லிங்டன் கிரசென்ட்டில் உள்ள தனது பங்களாவை இந்திரா காந்திக்கு கொடுத்தார். பிறகு அவர் தெற்கு டெல்லியில் ஒரு வீட்டிற்குக் குடியேறினார்.

வில்லிங்டன் கிரசென்ட்டில் இந்திரா காந்தியுடன் அவரது மூத்த மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா, அவர்களது இரண்டு குழந்தைகள் ராகுல் மற்றும் பிரியங்கா, இளைய மகன் சஞ்சய் மற்றும் அவரது மனைவி மேனகா ஆகியோர் வசித்தனர்.

அரசியல் நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாத அளவுக்கு அந்த இடம் மிகச் சிறியதாக இருந்தது.

By admin