• Mon. Mar 31st, 2025

24×7 Live News

Apdin News

29, 30, 31 தேதி​களி​ல் குடிநீர் வரி​ செலுத்தலாம் | Water tax can be paid on the 29th 30th and 31st

Byadmin

Mar 28, 2025


சென்னை: சென்னை குடிநீர் வாரி​யத்​துக்கு பொது​மக்​கள் செலுத்த வேண்​டிய குடிநீர் மற்​றும் கழி​வுநீரகற்று வரி, கட்​ட​ணங்​கள் மற்றும் நிலுவை தொகையை மார்ச் 31-ம் தேதிக்​குள் செலுத்த வேண்​டும்.

வரி செலுத்​து​வதற்கு ஏது​வாக அனைத்து பகுதி அலு​வல​கங்​கள், பணிமனை அலு​வல​கங்​கள் மற்​றும் தலைமை அலு​வல​கத்​தில் இயங்​கும் வசூல் மையங்​கள் அனைத்து அரசு விடு​முறை நாட்​களான மார்ச் 29 (சனிக்​கிழமை), 30 (ஞா​யிற்​றுக்​கிழமை), 31 (ரம்​ஜான்​-​திங்​கட்​கிழமை) ஆகிய தேதி​களில் இயங்​கும்.

மேலும், நுகர்​வோர்​கள் https://bnc.chennaimetrowater.in/#/public/cus-login என்ற வலை​தளத்​தைப் பயன்​படுத்தி இணை​ய​வழி​யிலும் செலுத்​தலாம்.



By admin