• Fri. Mar 6th, 2026

24×7 Live News

Apdin News

‘3 இடத்துக்கா இவ்வளவு மோதல்?’ – திமுக – காங்கிரஸ் கசப்பு தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்துமா?

Byadmin

Mar 5, 2026


திமுக, காங்கிரஸ், ஆட்சியில் பங்கு, தேர்தல்

பட மூலாதாரம், @mkstalin/X

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

தி.மு.க – காங்கிரஸ் இடையே நீடித்து வந்த அதிகாரப் பகிர்வு சர்ச்சை, கூட்டணி உடன்பாட்டின் மூலம் முடிவுக்கு வந்துவிட்டது. காங்கிரஸுக்கு 28 தொகுதிகளையும் ஒரு மாநிலங்களவை இடத்தையும் தி.மு.க ஒதுக்கியுள்ளது.

தி.மு.க காங்கிரஸ் இடையே ஏற்பட்ட ‘அதிகார பகிர்வு’ மோதலால் சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பு ஏற்படுமா?

தி.மு.க – காங்கிரஸ் இடையே கூட்டணி உடன்பாடு கையெழுத்தான பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, “தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக மனநிறைவுடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறோம்” என கூறினார்.

அருகில் இருந்த காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம், ‘அதிகார பகிர்வு’ நிலைப்பாடு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். “அதைப் பற்றி பிறகு பேசுவோம்” என செல்வப்பெருந்தகை பதில் அளித்தார்.

அதேநேரம், “இந்த எண்ணிக்கையில் பெரிதாக மகிழ்ச்சி இல்லை” என ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.

By admin