• Mon. Mar 10th, 2025

24×7 Live News

Apdin News

30 நிமிடங்களில் கனவா மீன் வறுவல் | கேரளா ஸ்டைலில் செய்து ருசிக்கலாம்

Byadmin

Mar 7, 2025


கேரளா ஸ்டைலில் கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம். வட்ட வட்டமாக சாப்பிடுவதற்கு ஜெல்லி போல கனவா மீன் வறுவல் இருக்கும். சிரமம் பார்க்காமல் 30 மணி நேரத்தில் கனவா மீன் வறுவல் செய்துவிடலாம்.

மீன், இறால், நண்டு போன்ற கடல் உணவுகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிக்கன், மட்டன் ஆகியவற்றில் வகைகள் கிடையாது. மீனில் அப்படியல்ல. கெழுத்தி, வஞ்சரம், அயிரை, கெண்டை, மத்தி, நெத்திலி, கனவா என பல வகைகள் உண்டு. ஒவ்வொரு மீனையும் வைத்து விதவிதமாக சமைத்து ருசிக்கலாம். இந்த பதிவில் கேரளா ஸ்டைல் கனவா மீன் வறுவல் எப்படி செய்வது என பார்க்கலாம். கனவா மீன் கடம்பா, கூந்தல் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதை கேரளாவில் கூந்தல் வறுவல் என்றே விற்கின்றனர். கனவா மீனை சுத்தப்படுத்த கொஞ்சம் நேரம் எடுக்கும். அதையும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். வட்ட வட்டமாக நறுக்கி தண்ணீரில் உப்பு போட்டு நன்கு கழுவி எடுக்கவும்.

கேரளா கனவா மீன் வறுவல் செய்ய தேவையானவை
கனவா மீன்
வெங்காயம்
தக்காளி
மஞ்சள் தூள்
மிளகாய் தூள்
உப்பு
மல்லித் தூள்
கரம் மசாலா
மிளகு தூள்
கறிவேப்பிலை
நல்லெண்ணெய்
சீரகம்
இஞ்சி
பூண்டு
கனவா மீன் சுத்தப்படுத்தும் முறை
கனவா மீனில் பல் இருக்காது. இதன் தலை பகுதியை பிடித்து இழுத்தால் கண், குட்டி குட்டி வால் வந்துவிடும். தலையை திருப்பி பார்த்தால் பல் போன்று இருக்கும் அதை கழித்துவிடவும். மீனிற்குள் விரல் விட்டு கழிவுகளை வெளியே எடுக்கவும். பிளாஸ்டிக் குச்சி போல இருக்கும் அதையும் வீசிவிடுங்கள். கனவா மீனின் தோல் கையுடன் எளிதாக வந்துவிடும்.

மேலும் படிங்கமண்சட்டியில் நெத்திலி மீன் குழம்பு செய்முறை; வாசனை மூக்கை துளைக்கும்.

கேரள கனவா மீன் வறுவல்
கடாயில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு ஸ்பூன் சீரகம் போடுங்கள். இப்போது ஒரு பெரிய வெங்காயத்தை பொடிதாக நறுக்கி போடவும்.
வெங்காயம் வதங்கும் போதே ஒரு பிச்சை மிளகாய் சேர்க்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு ஒரு தக்காளியை வெட்டி போடுங்கள்.

தக்காளி நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது அரை கிலோ சுத்தப்படுத்திய கனவா மீன் போடவும்.

ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், இரண்டு ஸ்பூன் மல்லித் தூள், ஒரு ஸ்பூன் கரம் மசாலா, கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் போட்டு கலந்துவிடவும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து ஐந்து பல் பூண்டு, இஞ்சி 20 கிராம் இடித்து சேர்க்கவும். கால் டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்க விடுங்கள்.

இப்போது ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கடாயை மூடிவிடுங்கள். 10 நிமிடங்களுக்கு கனவா மீன் நன்கு வேகட்டும். தண்ணீர் வற்றியதும் மசாலாவை பிரட்டி விடுங்கள்.
இறுதியாக ஒரு ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து கொஞ்சம் கறிவேப்பிலை போட்டு கலந்துவிட்டு அடுப்பை ஆஃப் செய்யவும்.

சாதத்தில் இரண்டு கரண் கனவா வறுவல் போட்டு கலந்து சாப்பிட்டு ருசியை அனுபவியுங்கள்.

By admin