• Wed. Dec 18th, 2024

24×7 Live News

Apdin News

4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் – மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்கள்?

Byadmin

Dec 18, 2024


நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்களே மனிதர்களை கொன்று தின்றார்களா ?

பட மூலாதாரம், Rick Schulting

  • எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்
  • பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர்

நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த எலும்புகளை வீசி எறிந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர்.

இந்தச் சம்பவம் ‘பழிவாங்கும்’ நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எதிரொலித்ததாகவும் கூறுகிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக் ஷூல்டிங்.

By admin