1
அடுத்த 5 ஆண்டுகளுக்கு வடகொரியா ஏவுகணைகளைத் தொடர்ந்து உருவாக்கும் என்று அந்நாட்டின் அரச ஊடகமான KCNA செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் ஏவுகணை உற்பத்தி நிறுவனங்களைச் சென்று பார்வையிட்டதை அடுத்து இந்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்த ஏவுகணை தயாரிப்புத் துறை மிக முக்கியம் என்று கிம் ஜோங் உன் கூறியதுடன், தேவைக்கு ஏற்ப அதிகளவில் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதுடன், தென் கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுப்பதற்கு வடகொரியா அதன் தற்காப்பு ஆற்றல்களை வலுப்படுத்த எண்ணுவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதங்களை அனுப்பலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.