• Tue. Aug 26th, 2025

24×7 Live News

Apdin News

50% வரி: அமெரிக்காவில் இந்தியாவுக்கு ஆதரவாக எழும் குரல்கள் – என்ன நடக்கிறது?

Byadmin

Aug 26, 2025


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது 50 சதவீத வரி விதித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியா மீது 50 சதவீத வரி விதிக்கப் போவதாக அறிவித்தார்.

இந்த முடிவு இந்தியா–அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், அமெரிக்க அரசியல் மற்றும் ஊடகங்களில் பெரிய விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.

சனிக்கிழமை அன்று, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்த இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் குறித்து கருத்து தெரிவித்தார்.

“ரஷ்ய எண்ணெயை அதிகமாக வாங்கும் நாடு சீனாதான். ஆனால் அதற்கு அதிக வரி விதிக்கப்படவில்லை. ஐரோப்பா ரஷ்யாவிடமிருந்து அதிக எல்என்ஜி (LNG) வாங்குகிறது, ஆனால் அவர்களுக்கு வேறு விதமான அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது நியாயமற்றது. எரிசக்தி மற்றும் ரஷ்யாவிடமிருந்து யார் அதிகமாக வாங்குகிறார்கள் என்பதைக் கொண்டு வாதம் நடத்தப்படுகிறது என்றால், இந்த இரண்டு விஷயங்களிலும் இந்தியா பின்தங்கியுள்ளது ” என்று ஜெய்சங்கர் கூறினார்.

By admin