• Mon. Jun 23rd, 2025

24×7 Live News

Apdin News

51-வது பிறந்தநாள் கொண்டாட்டம்: தவெக தலைவர் விஜய்-க்கு தலைவர்கள் வாழ்த்து | Political Leaders congratulate TVK leader Vijay 51st Birthday

Byadmin

Jun 23, 2025


சென்னை: தவெக தலைவர் விஜய்யின் 51-வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழகம் முழுவதும் தவெகவினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

தவெக தலைவரும் நடிகருமான விஜய்யின் 51-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் தவெக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி விழாவை கொண்டாடினர்.

தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள், நீலாங்கரையில் உள்ள சக்தி முத்துமாரியம்மன் கோயில், தேவாலயம் மற்றும் மசூதியில் சிறப்பு பூஜை, பிரார்த்தனை, துவா செய்து வழிபட்டனர்.

சென்னையில் உள்ள பல மருத்துவமனைகளில் நேற்று பிறந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தங்க மோதிரம், பேபி கிட், புத்தாடைகளை வழங்கினர்.

பிறந்தநாள் கொண்டாடிய விஜய்க்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம்:

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தவெக தலைவர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் எல்லா வளமும், நலமும் பெற்று நீண்ட ஆயுளுடன் மக்கள் நலப்பணியை தொடர வேண்டும்.

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: கலைத்துறையின் மூலம் தமிழக மக்களின், குறிப்பாக இளைஞர்களின் அன்பையும், பேராதரவையும் பெற்று வரும் நடிகர் விஜய், வாழ்க்கையில் பல வெற்றிகளை பெற்று பொது வாழ்க்கையில் மேலும் சேவைகளை தொடர்ந்து செய்திட வாழ்த்துகிறேன்.

பாமக தலைவர் அன்புமணி: தவெக தலைவர் விஜய் 51-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகள். நீண்ட, நோயில்லா வாழ்வு பெற்று பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: திரைப்பட துறையில் சாதித்ததைப்போல அரசியலிலும் மக்கள் சேவை பணிகளிலும் விஜய் சாதிக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை: தவெக தலைவர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். அவர், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், மக்கள் பணிகளை தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: தவெக தலைவர் விஜய், தமிழக மக்கள் நலன் காக்கும் பணியாற்ற நல்ல உடல் நலத்துடன், நீடுடி வாழ வாழ்த்துகள்.

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாக பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக் கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த் திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன் விஜய்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தவெக தலைவர் விஜய்க்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளோடும் பூரண உடல்நலத்துடனும் மக்கள் பணியை தொடர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.



r addtoany_content addtoany_content_bottom">

By admin