• Thu. Oct 9th, 2025

24×7 Live News

Apdin News

6 மாவட்டங்களில் அரசு மருத்துவக் கல்லூரிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்  | Ma Subramanian says govt medical colleges in 6 districts

Byadmin

Oct 9, 2025


தென்காசி: தென்​காசி உட்பட 6 மாவட்​டங்​களில் அரசு மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இதற்கு மத்​திய அரசின் பதிலுக்காக காத்​திருக்​கிறோம் என்று தமிழக சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் கூறி​னார். நெல்லை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யின் 60-வது ஆண்டு விழாவில் அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்​றார். சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு முன்​னிலை வகித்​தார்.

மாவட்ட ஆட்​சி​யர் ஆர்​.சுகு​மார் தலைமை வகித்​தார். ராபர்ட் புரூஸ் எம்​.பி., எம்​எல்​ஏ-க்​கள் ரூபி மனோகரன், அப்​துல் ​வ​காப், மருத்​து​வக் கல்​லூரி முதல்​வர் ரேவதி பாலன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். முனைஞ்​சிப்​பட்டி மற்​றும் பத்​தமடை ஆகிய இடங்​களில் அமைக்​கப்​பட்ட புதிய ஆரம்ப சுகா​தார நிலை​யக் கட்​டிடங்​களை திறந்​து​வைத்த அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மத்​திய பிரதேச மாநிலம் சிந்​து​ வாரா மாவட்​டத்​தில் குழந்​தைகள் உயி​ரிழப்​புக்கு தொடர்​புடைய​தாக கருதப்​படும் ‘கோல்ட்​ரிப்’ இரு​மல் மருந்து குறித்​து, மத்​திய அரசிட​மிருந்து கடந்த 1-ம் தேதி அவசரக் கடிதம் கிடைத்​தது.

உடனடி​யாக அந்த மருந்​தின் விற்​பனைக்கு தடை விதித்​தோம். தமிழ்​நாடு அரசு மருத்​து​வப் பணி​கள் கழகம் மூலம் அந்த மருந்து கொள்​முதல் செய்​யப்​பட​வில்லை என்​றாலும், தனி​யார் விற்​பனைக்கு உடனடி​யாக தடை விதிக்​கப்​பட்​டது. இரு​மல் மருந்​தில் டைஎத்​திலீன் கிளைக்​கால் என்ற நச்சு ரசாயனம் ஒரு சதவீதம்​கூட இருக்​கக் கூடாது. ஆனால், 48 சதவீதம் வரை கலந்​திருப்​பது பெரும் குற்​ற​மாகும். இதற்​காக சம்​பந்​தப்​பட்​ட​வர்​கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்​கப்​படும்.

தென்​காசி, மயி​லாடு​துறை, காஞ்​சிபுரம், திருப்​பத்​தூர், ராணிப்​பேட்​டை, பெரம்​பலூர் ஆகிய 6 மாவட்​டங்​களில் புதிய மருத்​து​வக் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும். இது தொடர்​பாக கடந்த 4 ஆண்​டு​களாக மத்​திய அரசிடம் வலி​யுறுத்தி வரு​கிறோம். பிரதமரிட​மும், மத்​திய சுகா​தா​ரத் துறை அமைச்​சரிட​மும் நேரடி​யாக கோரிக்கை வைத்​துள்​ளோம். இக்​கோரிக்​கை​யைப் பரிசீலிப்​ப​தாக கூறி​உள்​ளனர். மத்​திய அரசின் பதி​லுக்​காக காத்​திருக்​கிறோம். இவ்​வாறு அமைச்​சர் தெரி​வித்​தார்​.



By admin