7 மீட்டர் நீளம், அரை டன் எடை – 100 ஆண்டுகளில் முதன்முறை தென்பட்ட பிரமாண்ட கணவாய் மீன்
கடலில் ஒரு பிரமாண்டமான கணவாய் மீன் படம்பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. காணொளியில் உள்ள இந்த உயிரினம் 100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.
தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் 600 மீ ஆழத்தில், 30 செ.மீ நீளமுள்ள இந்த இளம் கணவாய் மீன் படம்பிடிக்கப்பட்டது.
இந்த இனம் 7மீ நீளம் வரை வளரக்கூடியது என்றும், அரை டன் வரை எடையுள்ளதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் நம்புகின்றனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு