• Wed. Aug 20th, 2025

24×7 Live News

Apdin News

75 டன் எடையுள்ள செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்த முயற்சி: இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல் | Attempt to launch 75-ton satellite into space: ISRO chief

Byadmin

Aug 20, 2025


சென்னை: ஏறத்​தாழ 75 டன் எடை கொண்ட செயற்​கைக்​கோள்​களை விண்​ணில் நிலைநிறுத்​து​வதற்​காக 40 மாடி உயரம் கொண்ட ராக்​கெட்டை உரு​வாக்கி வரு​வ​தாக இஸ்ரோ தலை​வர் நாராயணன் கூறி​னார்.

தெலங்​கானா மாநிலம் ஹைதரா​பாத்​தில் உள்ள உஸ்​மானியா பல்​கலைக்​கழக பட்​டமளிப்பு விழா​வில் சிறப்பு விருந்​தின​ராகப் பங்​கேற்ற இஸ்ரோ தலை​வர் வி.​நா​ராயணனுக்​கு, தெலங்​கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்​டர் பட்​டம் வழங்கி சிறப்​பித்​தார். தொடர்ந்து நாராயணன் பேசி​ய​தாவது: நடப்​பாண்​டில் இந்​திய ராக்​கெட்​டு​களைப் பயன்​படுத்தி அமெரிக்​கா​வின் 6,500 கிலோ எடை​யுள்ள தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளை விண்​வெளி​யில் நிலைநிறுத்​தும் பணி​கள்மேற்​கொள்​ளப்பட உள்​ளன. இதுத​விர, தொழில்​நுட்ப செயல் விளக்​கச் செயற்​கைக்​கோள் (TDS) மற்​றும் தகவல் தொடர்பு செயற்​கைக்​கோளான ஜிசாட்​-7ஆர் ஆகிய​வற்​றை​யும் விண்​ணில் ஏவ திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

தற்​போதுள்ள ஜிசாட்-7 (ருக்​மிணி) செயற்​கைக்​கோளுக்கு மாற்​றாக இந்​திய கடற்​படைக்​காக ஜிசாட்​-7ஆர் பிரத்​யேக​மாகவடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. மறைந்த விஞ்​ஞானி அப்​துல் கலாம் உரு​வாக்​கிய முதல் ராக்​கெட் 17 டன் எடை கொண்​டது. இது35 கிலோ எடையை பூமி​யின் தாழ்​வான சுற்​று​வட்​டப் பாதை​யில் செலுத்​தும் திறன் கொண்​டது. ஆனால், தற்​போது 75,000 கிலோ எடை​யுள்ள செயற்​கைக்​கோளை தாழ்​வான சுற்​றுப்​பாதை​யில் செலுத்​தும் ராக்​கெட்டை நாங்​கள் உரு​வாக்கி வரு​கிறோம். இந்த ராக்​கெட் 40 மாடி கட்​டிடம் உயரம் கொண்​டது. தற்​போது இந்​தி​யா​வில் 55 செயற்​கைக்​கோள்​கள் சுற்​றுப்​பாதை​யில் உள்​ளன. இந்த எண்​ணிக்கை 3 முதல் 4 ஆண்​டு​களில் 3 மடங்​காக அதி​கரிக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.



By admin