1
அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், தமது நிர்வாகம் எட்டு மாதங்களில் எட்டு போர்களைத் தடுத்துள்ளதாகக் கூறினார்.
தாய்லாந்தும் கம்போடியாவும் நேற்று (26) போர் நிறுத்த உடன்பாட்டில் கையெழுத்திட்டபோதே அவர் இதனைக் கூறினார்.
மலேசியா – கோலாலம்பூர் நகரில் நடக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் தாய்லாந்தும் கம்போடியாவும் எல்லைத் தகராற்றை நிறுத்த இணங்கின.
தாய்லாந்து மற்றும் கம்போடியப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தாம் பெருமை கொள்வதாக டிரம்ப் இதன்போது தெரிவித்தார்.
“எமது நிர்வாகம் எட்டு மாதங்களில் எட்டு போர்களைத் தடுத்துள்ளது. இதற்கு முன் அதனைப் போல் எதுவும் நடந்ததில்லை. இனிமேலும் நடக்கமாட்டாது. ஒரு போரையாவாது நிறுத்தியுள்ள ஜனாதிபதி உள்ளாரா? அவர்கள் போரைத் தொடங்குவார்கள்… நிறுத்துவதில்லை,” என டிரம்ப் தெரிவித்தார். .
இவ்வாண்டு ஜூலை மாதம் தாய்லாந்து, கம்போடியா எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தொடர்புடைய செய்திகள் : தாய்லாந்து – கம்போடியா தரப்பினர் மலேசியாவில் பேச்சுவார்த்தை!
தாய்லாந்து – கம்போடியா எல்லை மோதலில் 30 பேர் பலி; உடனடி அமைதிப் பேச்சுக்கு டிரம்ப் அழைப்பு!
இருநாட்டு இராணுவப் படைகளும் மோதியதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். சுமார் 300,000 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
அப்போது இரு நாடுகளுக்கும் பொதுவான அமைதி ஒப்பந்தத்தை டிரம்ப் ஜூலை மாதம் மலேசியாவுடன் சேர்ந்து வழிநடத்தினார்.
கம்போடியாவுக்கும் தாய்லாந்துக்கும் இடையிலான ஒப்பந்தம் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காக்கும் முக்கிய முயற்சி என்று அவர் கூறினார்.