• Thu. Aug 7th, 2025

24×7 Live News

Apdin News

80 மீனவர்கள், 237 மீன்பிடிப் படகுகளை விடுவிக்க நடவடிக்கை: ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம் | CM MK Stali writes to S.Jaishankar demanding release of TN Fishermen and their boats

Byadmin

Aug 7, 2025


சென்னை: இலங்கைக் காவலில் உள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுத்திட வேண்டுமென்று வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு நேற்று (புதன்கிழமை) கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தின் விவரம் வருமாறு: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு தூதரக ரீதியாக தலையிட வேண்டும் என்று தான் பலமுறை வேண்டுகோள் விடுத்த போதிலும், இதுபோன்ற கைது சம்பவங்கள் தொடர்வது மிகவும் . 2025 ஆம் ஆண்டில் மட்டும் நடைபெற்ற கைது சம்பவங்களில், இது 17-வது சம்பவம் .

தற்போது, 237 மீன்பிடிப் படகுகளும், 80 மீனவர்களும் இலங்கை அதிகாரிகளின் காவலில் இருப்பதாகவும், மீனவர்கள், அவர்களின் ஒரே வாழ்வாதாரமான பாரம்பரிய நீர்நிலைகளில் மீன்பிடிக்கும் உரிமையை இழந்துள்ளனர் என்பதை வேதனையுடன் சுட்டிக் காட்டுகிறேன்.

எனவே, கைது செய்யப்பட்ட அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை எடுத்திடுமாறு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.



any_content_bottom">

By admin