• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

’90 தொகுதி, இரண்டரை ஆண்டு முதல்வர் பதவி’: த.வெ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதா?

Byadmin

Mar 19, 2026


விஜய்

பட மூலாதாரம், TVK

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

தவெகவுடன் கூட்டணி வைப்பதற்காக 90 தொகுதிகள், இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி என்று பேரம் பேசப்பட்டதாகவும் அதை விஜய் மறுத்துவிட்டதாகவும் அக்கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கூறிய கருத்து, தமிழக அரசியலில் பேசுபொருளானது.

இதற்கேற்ப சென்னையில் நடந்த இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய், ”நமது தலைமையில்தான் ஆட்சி என்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என்று பேசியுள்ளார்.

ஆனால் தவெக பெரிய கட்சி என்று காண்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற ஒரு தகவலைப் பரப்புவதாகச் சொல்கிறார், பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம். திமுக தூண்டுதலின் பேரிலேயே ஆதவ் அர்ஜுனா இப்படியொரு தகவலைப் பரப்பி வருவதாகக் குற்றம்சாட்டுகிறார், அதிமுக செய்தித் தொடர்பாளர் கல்யாணசுந்தரம்.

ஆதவ் அர்ஜுனாவின் பேச்சும் நிர்மல்குமாரின் பதிவும்

ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழகம்

பட மூலாதாரம், x.com/AadhavArjuna

படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா, தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, சென்னை கொளத்தூாரில் மார்ச் 17 அன்று நடந்த கட்சிப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது, சில கருத்துகளைத் தெரிவித்தார்.

“நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்காததற்கு, திமுகவின் மிரட்டல்தான் காரணம்” என அவர் தெரிவித்தார். கடந்த வாரம் அவர் பேசிய கருத்துக்கு திமுக, அதிமுக மற்றும் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில், ரஜினிகாந்தும் எதிர்வினையாற்றியிருந்தார்.

By admin