• Tue. Mar 24th, 2026

24×7 Live News

Apdin News

AI இல்லையா?.. இந்திய பங்குச்சந்தையை புறக்கணிக்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்? – ஒரே மாதத்தில் ரூ.31,000 கோடி ஓவர்!

Byadmin

Mar 24, 2026


இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FPI) இந்தியாவில் தங்கள் முதலீடுகளை தொடர்ந்து குறைத்து வருகின்றனர்.

அவ்வாறு நடப்பு மார்ச் மாதத்தின் முதல் பாதியில் மட்டும் சுமார் ரூ.31,000 கோடி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிதி சந்தையிலிருந்து வெளியேறியுள்ளது.

இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், உலகளாவிய காரணிகள் சில, முதலீடுகளை பாதிக்கின்றன.

அந்த வகையில் போர்ச் சூழல் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க டாலர் மற்றும் கடன் பத்திரங்களின் வட்டி உயர்வு, முதலீட்டாளர்களை பாதுகாப்பான அமெரிக்க சந்தையை நோக்கி இழுக்கிறது.

அதேநேரம், தற்போது உலகளாவிய முதலீடுகள் அனைத்தும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), செமிகண்டக்டர்கள் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்பு ஆகியவற்றை நோக்கியே குவிகின்றன.

By admin