6
செயற்கை நுண்ணறிவை (AI) கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் என்று Alphabet நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
BBC ஊடகத்துக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“AI கருவிகள் சில நேரங்களில் தவறான தகவலைத் தரலாம்; அதனால் ஏனைய மாற்று வழிகள் மூலம் தகவல்களைச் சரிபார்க்கும்படி அவர் வலியுறுத்தினார்.
கூகலின் தேடல் தளமும் ஏனைய மென்பொருள்களும் துல்லியமான தகவல்களை வழங்கும் வகையில் நிர்வகிக்கப்படுவதால் அவற்றைப் பலர் பயன்படுத்துகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவேதான், தம் நிறுவனம் அதன் AI தளத் தேடல் முடிவுகளில் பிழை இருக்கலாம் என்ற அறிவிப்பை இணைத்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
