0
இலண்டனின் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே முதல்முறையாகக் கிறிஸ்துமஸ் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது போல் இணையத்தில் பல வீடியோக்கள் வெளியாகின.
ஆனால், அதை நம்பி நேரில் சென்றோருக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது.
காரணம், சமூக ஊடகத்தில் பரவும் அந்த வீடியோக்கள் செயற்கை நுண்ணறிவைக் (AI) கொண்டு தயாரிக்கப்பட்டவை ஆகும்.
இல்லாத சந்தையை உள்ளது போல் காட்டும் அந்த வீடியோக்கள் தாய், போர்ச்சுகீஸ் மற்றும் அரபு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.
அவை பார்ப்பதற்கு அசல் போன்றே இருந்ததாக நம்பி ஏமாந்ததாக சிலர் கூறினர். அந்த வீடியோக்கள் AI கொண்டு தயாரிக்கப்பட்டவை என்று சில இணையப் பிரபலங்களும் தற்போது விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இலண்டனில் சில கிறிஸ்துமஸ் சந்தைகள் உள்ளன. ஆனால், பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே எந்தச் சந்தையும் ஏற்பாடு செய்யப்படவில்லை என்று Royal Collection Trust அற நிறுவனம் தெரிவித்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, சிறிய கடை மட்டுமே வைக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டது.