• Thu. Apr 9th, 2026

24×7 Live News

Apdin News

Arya 40 | ரோம்காம் ஜானரில் உருவாகும் ஆர்யா திரைப்படம்… அவரே கொடுத்த அப்டேட்!

Byadmin

Apr 9, 2026


நடிகர் ஆர்யா மற்றும் கவுதம் ராம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “மிஸ்டர் எக்ஸ்.” இந்தப் படத்தின் பணிகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், இந்தப் படம் வருகிற 17-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. முன்னதாக இந்தப் படத்தின் டீசர் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் ஆர்யா அளித்த பேட்டி ஒன்றில் நீண்ட இடைவெளிக்கு பிறகு காதல் கதையம்சம் கொண்ட படத்தில் நடித்துள்ளதாக தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய அவர், “`ஆர்யா 40′ திரைப்படம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் நடிப்பில் வெளியாகும் இதமான காதல் கதையாக அமையும்.

இது `ராஜா ராணி’ போன்ற ஒரு காதல்-நகைச்சுவை (Rom-Com) வகையைச் சேர்ந்த படமாக இருக்கும். அதே சமயம், இன்றைய தலைமுறை ரசிகர்களுக்காக இதில் கூடுதல் உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

என் படங்களில் எனக்கு பொருத்தமான கதாநாயகிகள் அமைவதில்லை என்று நான் நீண்ட காலமாகவே ஆதங்கப்பட்டு வந்தேன்.

அதனால், `ஆர்யா 40′ திரைப்படம் முழுவதும் அந்த இரண்டு கதாநாயகிகளுடன் மட்டுமே நான் உரையாடுவது போல கதையை அமைத்துவிடலாம் என்று முடிவு செய்தேன். படத்தின் பெரும்பாலான காட்சிகள் மற்றும் வசனங்கள் அனைத்தும் அந்த கதாநாயகிகளுடனேயே அமைந்திருக்கும். இந்தப் படத்தை நானே தயாரித்துள்ளேன்,” என்றார்.

By admin