• Sun. Feb 23rd, 2025

24×7 Live News

Apdin News

AUS vs ENG சேவாக் சாதனையை சமன் செய்த ஜோஸ் இங்கிலிஸ் – 352 ரன் இலக்கை ஆஸ்திரேலியா சேஸ் செய்தது எப்படி?

Byadmin

Feb 23, 2025


ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, சாம்பியன்ஸ் டிராபி

பட மூலாதாரம், Getty Images

லாகூரில் நேற்று நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பி பிரிவில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆஸ்திரேலிய அணி.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. 352 ரன்கள் எனும் இமாலய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 15 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ரன்கள் சேர்த்து வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.

ஆஸ்திரேலிய அணி தொடக்கத்திலேயே 27 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தவுடன் லாகூர் கடாபி அரங்கில் கூட்டம் கலையத் தொடங்கியது. சிலர் நின்று கொண்டு ஆட்டத்தைப் பார்க்கத் தொடங்கினர்.

ஆனால், நேரம் செல்லச் செல்ல வீட்டுக்கு புறப்படலாம் என நினைத்த ரசிகர்களை ஆஸ்திரேலிய பேட்டர்கள் தங்கள்ஆட்டத்தின் மூலம் கட்டிப்போட்டனர். வெளியே செல்லலாம் என நினைத்த ரசிகர்களும் ஆட்டத்தின் போக்கை கேள்விப்பட்டு மீண்டும் இருக்கைக்கு வந்து ஆட்டத்தை ரசித்தனர்.

By admin