• Mon. Oct 21st, 2024

24×7 Live News

Apdin News

Bioluminescence: சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் – காரணம் என்ன? இது ஆபத்தானதா?

Byadmin

Oct 21, 2024


சென்னையில் நீல, பச்சை வண்ணத்தில் மின்னிய கடல் - காரணம் என்ன? இது ஆபத்தானதா?

பட மூலாதாரம், Palayam/Special arrangement

படக்குறிப்பு, நீல நிறத்தில் காட்சியளிக்கும் கடல்

நேற்று முன்தினம் (சனிக்கிழமை) இரவு இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களை நீங்கள் கவனித்திருந்தால், பலரும் சென்னை கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் கடல் பச்சை, நீல வண்ணத்தில் பிரகாசமாக மிண்ணும் வீடியோக்களை வரிசையாக பகிர்ந்திருந்ததை பார்த்திருக்கலாம்.

வண்ணமயமான விளக்குகளுடன் ஏதோ கண்கவர் நிகழ்வு நடைபெறுவது போல இருந்தது அந்த காட்சி.

கடலில் ஏற்படும் இந்த விளைவை ஆங்கிலத்தில் ‘பயோலூமினசென்ஸ்’ (Bioluminescence) என அழைக்கின்றனர். தமிழில் ‘உயிரொளிர்வு’ என்கின்றனர்.

பொதுமக்கள் பலரும் இந்த காட்சியை பார்க்க கடற்கரைகளுக்கு சென்றனர்.

By admin