11
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று வெள்ளிக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் விசாரணை ஒன்றுக்காக ஆஜரான நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இலண்டனுக்குச் சென்றமை குறித்த விசாரணை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கைதுசெய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.