• Wed. Mar 25th, 2026

24×7 Live News

Apdin News

Congress தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

Byadmin

Mar 25, 2026


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி நேற்று இரவு திடீரென டெல்லியில் உள்ள கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

உடல்நலக் குறைவு காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அவரது மகனும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா வத்ரா ஆகியோர் மருத்துவமனை சென்று தாயாரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர்.

சோனியா காந்தியின் உடல் நிலையை கண்காணித்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை எம்.பி. ஆக 5 முறை சோனியா காந்தி இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

By admin