• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

CRIB: இந்தியாவில் பெங்களுரு பெண்ணிடம் உலகில் வேறு யாருக்கும் இல்லாத ரத்த வகை கண்டுபிடிப்பு – எப்படி?

Byadmin

Aug 4, 2025


ரத்தம், அரிய வகை ரத்தம், புதிய ரத்த வகை கண்டுபிடிப்பு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவப்பு ரத்த அணுக்கள் (மாதிரிப்படம்)

நீங்கள் ‘ஏ’, ‘பி’, ‘ஓ’ மற்றும் ‘ஆர்ஹெச்’ (‘A’, ‘B’, ‘O’ மற்றும் ‘RH’ ) போன்ற ரத்த வகைகள் பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இவற்றைத் தவிர, சில அரிய வகை ரத்த வகைகளும் உள்ளன.

அந்த வரிசையில் இப்போது இந்தியாவில் ஒரு புதிய ரத்த வகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது கிரிப் (CRIB) என அறியப்படுகின்றது.

கிரிப் (CRIB) – ல் உள்ள சி ( C ) என்பது 47 ரத்த வகைகளில் ஒன்றான க்ரோமெரைக் (Cromer -CH) குறிக்கிறது, ஐ (I) என்பது இந்தியாவையும் பி (B) என்பது பெங்களூருவையும் குறிக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இது பெங்களூரு அருகே உள்ள ஒரு பெண்ணிடம் கண்டறியப்பட்ட ரத்த வகை. இந்த அரிய வகை இரத்தம் 38 வயதான பெண் ஒருவரிடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, இதய அறுவை சிகிச்சை செய்யும்போது, ரத்தம் செலுத்த வேண்டிய தேவை வந்தால், அப்போது பயன்படுத்துவதற்காக ஒன்று அல்லது இரண்டு பாட்டில் ரத்தத்தை தயாராக வைத்திருப்பது வழக்கமான நடைமுறை.

By admin