• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

CROPS: இஸ்ரோ ஒரே நேரத்தில் 2 பரிசோதனைகளில் வெற்றி – விண்வெளியில் தட்டைப்பயறை முளைக்கச் செய்தது எப்படி?

Byadmin

Jan 5, 2025


விண்வெளியில் தட்டைப்பயறு விதையை முளைக்க வைத்த ரோபோ – இஸ்ரோ சாதித்தது எப்படி?

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, விண்வெளியில் தட்டைப்பயறு விதையை முளைக்கச் செய்துள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது

‘விண்வெளியில் உயிர் துளிர்விட்டுள்ளது.’

இஸ்ரோ வெளியிட்ட எக்ஸ் பதிவில் இருந்த இந்த வார்த்தைகள் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவை.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் விண்வெளிக்கு கடந்த டிசம்பர் 30ஆம் தேதியன்று எடுத்துச் செல்லப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நான்கு நாட்களில் தட்டைப்பயறு விதைகள் துளிர்விடத் தொடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி, இந்தியாவின் முதல் ரோபோடிக் கையின் செயல்பாடு குறித்த சோதனையும் விண்வெளியில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. ஈர்ப்பு விசையில்லாத விண்வெளியில் இஸ்ரோ ஒரு தாவரத்தை முளைவிடச் செய்தது எப்படி?

By admin