• Sun. Apr 12th, 2026

24×7 Live News

Apdin News

CSK vs DC: சாம்சன் சதத்தால் சிஎஸ்கே முதல் வெற்றி – வெற்றி நடை தொடர இது போதுமா?

Byadmin

Apr 12, 2026


CSK vs DC, சாம்சன் சதம், சிஎஸ்கே முதல் வெற்றி, ஆயுஷ் மாத்ரே, தோனி, பிரெவிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு இந்த சீசனில் தங்கள் முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் (கோப்புப் படம்)

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹாட்ரிக் தோல்விக்குப் பிறகு தனது முதல் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது. சேப்பாக்கத்தில் ஒரு முழுமையான செயல்பாட்டைக் கொடுத்து தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது சிஎஸ்கே.

டாஸை தோற்றிருந்தாலும் அதைப் பற்றி யோசிக்காமல் முதலில் பேட்டிங் செய்து ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. பெரும் விமர்சனங்களை சந்தித்த அந்த அணியின் பௌலிங் மிகமுக்கியமான இந்தப் போட்டியில் எழுச்சி கண்டிருக்கிறது. போதாக்குறைக்கு இந்தப் போட்டியில் சூப்பர் கிங்ஸின் ஃபீல்டிங்குமே சமீபத்தில் இல்லாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.

அனைத்து துறைகளும் நல்ல செயல்பாட்டைக் கொடுத்திருக்கும் நிலையில், டெவால் பிரெவிஸும் அணியில் இணைந்திருப்பது சூப்பர் கிங்ஸ் மீது பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அடுத்த சில நாள்கள் சூப்பர் கிங்ஸுக்கு சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையையும் இந்த செயல்பாடு கொடுத்திருக்கிறது.

உத்வேகம் கொடுத்திருக்கும் சாம்சன்

ஹாட்ரிக் தோல்விகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு உத்வேகம் கொடுக்கக்கூடிய ஒரு செயல்பாடு தேவைப்பட்டது. அதைக் கொடுக்கக்கூடிய வீரர்கள் நிறையப் பேர் இருந்திருந்தாலும் அந்த 3 போட்டிகளில் அப்படியொரு செயல்பாடு கிடைக்கவில்லை. அது தற்போது சஞ்சு சாம்சன் வாயிலாக வந்திருக்கிறது. அணிக்குத் தேவையான நேரத்தில் ஒரு பெரிய சதம் அடித்திருக்கிறார் அவர்.

உலகக்கோப்பை செயல்பாட்டுக்குப் பிறகு அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. முதல் 3 போட்டிகளிலும் அது நடக்கவில்லை என்றாலும், இந்தப் போட்டியில் ஒரு மகத்தான இன்னிங்ஸை அவர் ஆடியிருக்கிறார். முந்தைய போட்டிகளில் அவரிடத்தில் ஒரு நெருக்கடி தெரிந்திருந்தாலும், இந்தப் போட்டியில் அது எதையுமே அவரிடத்தில் பார்க்க முடியவில்லை. அவர் மிகவும் அமைதியாகவும், நிதானமாகவுமே இருந்தார்.

By admin