லக்னௌவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். இரவு நேரத்தில் ஈரப்பதத்தின் தாக்கம் இருக்கும் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக அவர் கூறினார்.
கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் இழக்காத லக்னௌ அணி இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.
லெக்சைடில் மார்க்ரம் விளாசிய பந்தை ராகுல் திரிபாதி அபாரமாக ஓடிச் சென்று கேட்ச் செய்தார் ராகுல் திரிபாதி. மறுபுறம் நிகோலஸ் பூரனின் விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் கம்போஜ் வீழ்த்தினார். இருப்பினும் மிட்செல் மார்ஷ் நிலைத்து நின்று ஆடினார். மறுபுறம் அவருக்கு துணையாக கேப்டன் ரிஷப் பண்ட்டும் களமிறங்கி ரன்களைத் திரட்டினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அபாரமாக கேட்ச் செய்த திரிபாதியை சகவீரர்கள் பாராட்டுகின்றனர்
நிலைத்து ஆட முயன்ற இந்த இணையை ரவீந்திர ஜடேஜா பிரித்தார். 10வது ஓவரில் மார்ஷ் கிளீன் பவுல்டாகி ஆட்டமிழந்தார். இதன் பின்னர் களமிறங்கிய பதோனி அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். ஜேமி ஓவர்டன் வீசிய 12 வது ஓவரில் இரண்டு சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார் பதோனி.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆட்டமிழந்த மிட்செல் மார்ஷ்
இருமுறை அவுட் ஆவதிலிருந்து தப்பிய பதோனி ஜடேஜா வீசிய பந்தை இறங்கி வந்து ஆட முயற்சிக்கும் போது, தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் சிஎஸ்கே பந்து வீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்து வீசி அழுத்தம் ஏற்படுத்தினர். குறிப்பாக நூர் அகமது வீசிய 15வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
இக்கட்டான சூழலில் பொறுப்பாக பேட்டிங் செய்த லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பொறுப்பை உணர்ந்து ஆடிய ரிஷப் பண்ட்
இரண்டுமுறை அவுட் ஆவதிலிந்து தப்பிய ரிஷப் பண்ட் , கடைசி ஓவரில் பதிராணா பந்து வீச்சில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் லக்னௌ அணி 7 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது.
சென்னை அணியில் மாற்றம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் பிளேயிங் லெவனில் இல்லை
சென்னை அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,டெவோன் கான்வே நீக்கப்பட்டு ஷேக் ரஷீத் மற்றும் ஜேமி ஓவர்டன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
“நான் தோனியுடன் அனைத்தையும் ஆலோசிப்பேன். நான் மனம் விட்டுப்பேசக் கூடிய வெகுசிலரில் அவரும் ஒருவர். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தோனியிடம் பகிர்ந்த விஷயங்களை வேறு யாருடனும் நான் பேசியது இல்லை” இது தோனி குறித்து ரிஷப் பண்ட் பேசிய வார்த்தைகள்.
இவ்வாறு குரு-சிஷ்யன் உறவுடை இருவரின் தலைமையில் இரு அணிகளும் இன்று மோதுகின்றன. சென்னை அணியைப் பொருத்தவரையிலும் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் 6 போட்டிகளில் 1 வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. ஆனால் லக்னௌ அணி 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4 வது இடத்தில் உள்ளது. அதிலும் கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் லக்னௌ அணி வென்றுள்ளது. இந்த 3 போட்டிகளிலுமே லக்னௌ பவர்பிளேயில் விக்கெட்டை இழக்கவில்லை.
ஆனால் சென்னை அணி பவர்பிளேயில் தொடர்ந்து தடுமாறி வருகிறது. ஐபிஎல் தொடரின் டாப் 10 பேட்டர்கள் வரிசையில் ஒரு சென்னை வீரர் கூட இல்லை.