• Sat. May 2nd, 2026

24×7 Live News

Apdin News

CSK vs MI: சிஎஸ்கே மும்பையை மீண்டும் வெல்லுமா? இரு அணிகளிலும் என்ன மாற்றம் இருக்கலாம்?

Byadmin

May 2, 2026


CSK vs MI, ஐபிஎல், பாண்டியா, ருதுராஜ், தோனி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ருதுராஜ் கெய்க்வாட் 8 போட்டிகளில் 178 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 121.09 தான் (கோப்புப் படம்)

ஐபிஎல் தொடரின் ‘எல் கிளாசிகோ’ என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் இந்த சீசனில் இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது. வான்கடேவில் கடந்த ஏப்ரல் 23-இல் நடந்த போட்டியில் 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்திருந்தது சிஎஸ்கே. இந்நிலையில், இன்று (மே 2) சேப்பாக்கத்தில் இவ்விரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன.

இரண்டு அணிகளுக்குமே இந்தப் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் பாதியில் இருக்கும் இரு அணிகளுக்கும் ஒவ்வொரு போட்டியுமே முக்கியம். முக்கியமாக மும்பை இந்தியன்ஸ் அணி இனி ஆடும் போட்டிகள் அனைத்திலுமே வெற்றி பெறுவது அவசியம்.

ஏனெனில், அவர்கள் 8 போட்டிகளில் 4 புள்ளிகள் மட்டுமே பெற்றிருக்கிறார்கள். மீதமிருக்கும் 6 ஆட்டங்களையும் வென்றால் மட்டுமே அவர்கள் 16 புள்ளிகள் பெற முடியும். 2022 சீசன் முதலே 16 புள்ளிகள் பெற்ற அணிகள் (2024 சீசனில் ஆர்சிபி தவிர்த்து) தான் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருக்கின்றன. அந்த வகையில் இந்தப் போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிக முக்கியத்துவம் பெற்றதாக அமைந்திருக்கிறது.

ஃபார்மை வைத்துப் பார்க்கும்போது மும்பையை விட சிஎஸ்கே ஓரளவு சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறது. குஜராத் டைட்டன்ஸ் ஆட்டத்தைத் தவிர்த்து கடந்த சில போட்டிகளில் அவர்கள் நல்ல கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். அவர்களால் தொடர்ச்சியாக 200-க்கு அருகே ஸ்கோர் எடுக்க முடிகிறது. பந்துவீச்சும் ஓரளவு முன்னேற்றம் கண்டிருக்கிறது. அகீல் ஹொசைன், அன்ஷுல் கம்போஜ், குர்ஜப்னீச் சிங் என அனைவருமே நம்பிக்கை தரும் செயல்பாடுகள் கொடுத்திருக்கிறார்கள். ஜேமி ஓவர்டன் பேட்டிங், பௌலிங் என இரண்டு துறைகளிலும் அசத்துகிறார்.

அதேசமயம், மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பையும் புறக்கணித்துவிட முடியாது. முந்தைய போட்டியில் தான் அவர்கள் 240 ரன்கள் எடுத்திருக்கிறார்கள். அவ்வளவு பெரிய ஸ்கோர் எடுக்கும்போது அது நிச்சயம் அந்த அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

By admin