• Mon. Apr 21st, 2025

24×7 Live News

Apdin News

CSK vs MI: மும்பை அணி அபார வெற்றி – சென்னைக்கு மங்கும் பிளே ஆஃப் வாய்ப்பு

Byadmin

Apr 20, 2025


சிஎஸ்கே, மும்பை , எம்ஐ

பட மூலாதாரம், Getty Images

2025 ஐபிஎல்லில் தொடர்ச்சியான தோல்விகளில் இருந்து கடந்த போட்டியில் மீண்ட சென்னை அணி, மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களை எடுத்தது. இதனை சேஸ் செய்த மும்பை அணி ரோகித் ஷர்மாவின் அபார ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

‘ஐபிஎல்-இன் எல் கிளாசிகோ’ என்று வர்ணிக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையிலான லீக் ஆட்டம் மும்பையில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ஷேக் ரஷீத் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய தீபக் சஹர், நான்கு டாட் பந்துகளுடன் இரண்டு ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

நிதானமாக ஆடிய துவக்க ஆட்டக்காரர்கள், மூன்றாவது ஓவரின் கடைசி பந்தில்தான் முதல் பவுண்டரியை அடித்தனர். ஆனால் நான்காவது ஓவரின் முதல் பந்திலே சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அஷ்வினி குமார் வீசிய பந்தில், ரச்சின் ரவீந்திரா 5 ரன்களில் ஆட்டமிழந்தார்.

By admin