• Tue. Mar 31st, 2026

24×7 Live News

Apdin News

CSK vs RR: சூர்யவன்ஷி அதிரடி – சிஎஸ்கே குறைந்த ரன்களில் சுருண்டது ஏன்? ஓர் அலசல்

Byadmin

Mar 31, 2026


CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2026 சீசனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியுடன் தொடங்கியிருக்கிறது (கோப்புப் படம்)

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2026 சீசன் மிகவும் மோசமாகத் தொடங்கியிருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் வெறும் 127 ரன்கள் மட்டுமே எடுத்த சிஎஸ்கே, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. 2025-ஆம் ஆண்டு அவர்களின் பேட்டிங் எப்படி ஏமாற்றமளித்ததோ, அதுபோலத்தான் இந்தப் போட்டியும் தொடங்கியிருக்கிறது.

எந்தவொரு தொடராக இருந்தாலும் அதன் முதல் போட்டியில் தங்களின் மிகச் சிறந்த, பலமான அணியை விளையாட வைக்க வேண்டும் என்றுதான் எந்த அணியுமே விரும்பும். ஆனால், சூப்பர் கிங்ஸால் அப்படியொரு லெவனைக் களமிறக்க முடியவில்லை.

காயம் காரணமாக மஹேந்திர சிங் தோனி 2 வாரங்களுக்கு விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. அதேபோல் டெவால் பிரெவிஸும் காயம் காரணமாக விளையாடாதது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் தடுமாறிக் கொண்டிருந்த போது பிரெவிஸ் வந்துதான் அந்த நிலைமையை மாற்றினார். இப்படி இரண்டு முக்கிய வீரர்கள் இல்லாதது ஆரம்பம் முதலே சிஎஸ்கே-வை பின்தங்க வைத்திருந்தது.

அதன்பிறகு ஆடுகளத்தின் தன்மையையும் சூழலையும் புரிந்துகொள்ளாமல் பேட்டிங் செய்து பெரும் சரிவை சந்தித்தது சூப்பர் கிங்ஸ். ஏமாற்றம் தரும் ஒரு பேட்டிங் செயல்பாட்டை வெளிப்படுத்தியது சிஎஸ்கே அணி.

CSK vs RR, 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தோனி & பிரெவிஸ் காயம் காரணமாக இந்தப் போட்டியில் விளையாடவில்லை (கோப்புப் படம்)

பேட்டிங் & ஃபீல்டிங் ஏமாற்றம்

இந்தப் போட்டியில் டாஸ் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்தியது. போட்டிக்கு முந்தைய நாள்களில் மழை பெய்திருந்தது. ஆடுகளம் மூடப்பட்டிருந்தது. அதனால் ஆடுகளத்தில் நல்ல ஈரப்பதம் இருந்தது. அதனால் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ‘சீம், மூவ்மென்ட், ஸ்விங்’ அனைத்தும் நன்றாகக் கிடைத்தது. அதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.

By admin