• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

Diesel Movie Review: ஹாட்ரிக் வெற்றியைப் பெற்றாரா ஹரிஷ் கல்யாண்?

Byadmin

Oct 19, 2025


 டீசல் ஊடக விமர்சனம், ஹரிஷ் கல்யாண், கோலிவுட், திரைப்படங்கள்

பட மூலாதாரம், @ThirdEye_Films

சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், வினய் ராய், அதுல்யா ரவி, சாய் குமார், கருணாஸ், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘டீசல்’ திரைப்படம், தீபாவளியை ஒட்டி நேற்று (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

‘தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் முந்தைய இரு திரைப்படங்களான ‘பார்க்கிங்’, ‘லப்பர் பந்து’ ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு ஓரளவு எதிர்பார்ப்புகள் இருந்தன, ‘டீசல்’ படம் அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளதா? ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

டீசல் திரைப்படத்தின் கதை என்ன?

1980களில் வடசென்னையின் கடலோர பகுதியில் கடலை ஒட்டி கச்சா எண்ணெய் குழாய் இணைப்பு கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் என அங்குள்ள மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராடுகின்றனர்.



By admin