• Wed. Oct 15th, 2025

24×7 Live News

Apdin News

EPFO கணக்கில் இருந்து இனி முழு பணத்தையும் எடுக்கலாம் – புதிய விதிகள் முழு விவரம்

Byadmin

Oct 15, 2025


முழு பிஎஃப் தொகையையும் இனி எடுக்க முடியுமா? - புதிய விதிகள் குறித்து விளக்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திங்கட்கிழமை மத்திய அரசு புதிய விதிகளை அறிவித்தது

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) பணத்தை எடுப்பதற்கான விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், அதிலிருந்து பணம் எடுப்பதற்கான விதிகளும் எளிமையாக்கப்பட்டுள்ளன.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் 7 கோடி உறுப்பினர்கள் உள்ளனர். புதிய விதிகளின்படி, உறுப்பினர்கள் தங்களுக்கு தேவைப்படும்போது பணத்தை எடுக்க முடியும்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தலைமையிலான மத்திய அறங்காவலர் குழுவினர் (CBT), இந்த புதிய விதிகளை வகுத்துள்ளனர்.

இந்த புதிய விதிமுறைகளின்படி, உறுப்பினர்கள் தங்களுடைய மொத்த பிஎஃப் தொகையையும் எடுக்க முடியும், இருப்பினும் குறைந்தபட்ச வைப்புத் தொகை (minimum balance) இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் தக்கவைக்கப்பட்டுள்ளது.



By admin