• Wed. Jul 15th, 2026

24×7 Live News

Apdin News

FIFA: பிரான்ஸை வீழ்த்தி ஸ்பெயின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது எப்படி?

Byadmin

Jul 15, 2026


ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்பெயின் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது

    • எழுதியவர், சாம் ட்ரூரி
    • பதவி, பிபிசி ஸ்போர்ட்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பிரான்ஸ் அணியை வீழ்த்தி ஸ்பெயின் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், வெற்றிபெற அதிக வாய்ப்புள்ள அணியாகக் கருதப்பட்ட பிரான்ஸை மிகச்சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஸ்பெயின் வீழ்த்தியது.

லுயிஸ் டி லா ஃபுயெண்டேவின் ஸ்பெயின் அணி, நட்சத்திர தாக்குதல் ஆட்டக்காரர்கள் நிறைந்த பிரான்ஸ் அணியை முற்றிலும் தடுத்து வைத்திருந்தது. போட்டியில் பெரிய அளவில் கோல் அடிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகவில்லை என்றாலும், ஆட்டத்தின் மீதான கட்டுப்பாட்டை ஸ்பெயின் தக்க வைத்துக் கொண்டது. மிகேல் ஓயார்ஸாபால் மற்றும் பெட்ரோ போரோ ஆகியோரின் கோல்களின் உதவியோடு, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு ஸ்பெயின் முன்னேறியது.

முதல் பாதியின் நடுப்பகுதியில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. பிரான்ஸ் அணியின் லெஃப்ட்-பேக் லுகாஸ் திக்னே செய்த தவறால், பந்தை கிளியர் செய்ய முயன்ற ஃபார்வர்ட் லாமின் யமால் மீது பலமாக மோதினார். இதனால் போட்டி நடுவர் பெனால்டி வழங்கினார்.

ஓயார்ஸாபால் முழு நம்பிக்கையுடன் அந்த பெனால்டியை கோல் போஸ்ட்டின் மூலைக்கு அனுப்பி கோலாக மாற்றினார். இந்த முன்னிலையைப் பெற்ற பிறகு, ஸ்பெயின் ஆட்டத்தின் மீதான தனது பிடியை மேலும் வலுப்படுத்தியது.

முதல் பாதியில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரான்ஸ் அணி, இரண்டாவது பாதியில் வலுவாக மீண்டு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்தது. ஸ்பெயின் அணி மீண்டும் ஆட்டத்தின் மீது தனது முழு ஆதிக்கத்தை செலுத்தியது. பெட்ரோ போரோ, டானி ஓல்மோவுடன் இணைந்து மிகச்சிறப்பாக பந்தை பரிமாறிக்கொண்டு விளையாடி, கோல் போஸ்ட்டின் அருகில் இருந்து அணியின் இரண்டாவது கோலை அடித்தார்.

By admin