• Fri. Jun 19th, 2026

24×7 Live News

Apdin News

FIFA 2026: சாமுவேல் முத்துசாமி உட்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 4 வீரர்கள்

Byadmin

Jun 19, 2026


இடமிருந்து வலமாக சர்ப்ரீத் சிங், நிஷான் வேலுப்பிள்ளை, தஹ்சீன் முகமது ஜாம்ஷெட், சாமுவேல் முத்துசாமி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய வம்சாவளி கால்பந்து வீரர்கள் (இடமிருந்து வலமாக) சர்ப்ரீத் சிங், நிஷான் வேலுப்பிள்ளை, தஹ்சீன் முகமது ஜாம்ஷெட், சாமுவேல் முத்துசாமி

    • எழுதியவர், ஜான்வி முலே
    • பதவி, பிபிசி நியூஸ் மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஃபிஃபா (FIFA) உலகக் கோப்பையில் இந்தியாவின் சீனியர் அணி விளையாடுவதைக் காண வேண்டும் என்ற இந்திய கால்பந்து ரசிகர்களின் கனவு இந்த முறை நிறைவேறவில்லை.

இருப்பினும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சில வீரர்கள் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் களம் இறங்குகிறார்கள்.

ஜூன் 11 அன்று தொடங்கிய இந்தத் தொடரை மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன, மேலும் இந்த முறை 48 நாடுகள் இதில் பங்கேற்றுள்ளன.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நான்கு கால்பந்து வீரர்கள், பல்வேறு நாடுகளின் அணிகளில் விளையாடுவதைக் காணலாம்.

2006-ல் நடைபெற்ற ஃபிஃபா உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணிக்காக விளையாடிய முதல் இந்திய வம்சாவளி வீரர் என்ற பெருமையை விகாஷ் தோரசூ பெற்றார். ஆனால், அவரது சர்வதேச கால்பந்து செயல்பாடு அவ்வளவு சிறப்பாக அமையவில்லை.

By admin