• Thu. Dec 19th, 2024

24×7 Live News

Apdin News

Firefly Sparkle: கிறிஸ்துமஸ் விளக்குகள் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள் என்ன?

Byadmin

Dec 18, 2024


NASA, விண்மீன் திரள், பிரபஞ்சம்

பட மூலாதாரம், NASA

நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் (JWST) எனப்படும் விண்வெளி தொலைநோக்கி முதன்முறையாக நமது விண்மீன் திரள் உருவாகும்போது எப்படி இருந்ததோ அதைப்போலவே இருக்கும் ஒரு விண்மீன் திரளை படம்பிடித்துள்ளது. இதை கண்டதும் விஞ்ஞானிகள் கிறிஸ்துமஸ் பண்டிகை போல உணர்வதாக உற்சாகம் அடைந்துள்ளனர்.

“இது பிரபஞ்சம் 600 மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்த போது இருந்த விண்மீன் திரள் எப்படி இருந்ததோ அது போலவே தெரிகிறது. கிறிஸ்துமஸ் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது போல இருக்கும் இந்த ஒளிரும் விண்மீன் திரளை மிகவும் விரும்புகிறேன்”, என்று ஸ்காட்லாந்து விண்வெளி ஆய்வாளர் பேராசிரியர் கேத்தரின் ஹெய்மன்ஸ் பிபிசியிடம் கூறினார்.

இந்த படத்தில் 10 நட்சத்திரங்கள் வெவ்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் மரத்தில் தொங்க விடப்பட்டுள்ள அலங்கார பந்துகளைப் போல தெரிகின்றன.

நம்முடைய பால் வீதி போன்ற ஒரு விண்மீன் திரள் உருவாக நட்சத்திரங்கள் ஒன்று திரளும் காட்சியை விஞ்ஞானிகள் முதல் முறையாக கண்டுள்ளனர். இது பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதை பற்றிய சில குறிப்புகளை அளிக்கின்றன.

By admin