• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

Gen Z தலைமுறையினர் பணியிடங்களில் என்ன எதிர்பார்க்கிறார்கள்? – 90s மேலாளர்கள் கவனத்திற்கு

Byadmin

Aug 4, 2025


ஜென் ஜி தலைமுறையினர்

பட மூலாதாரம், Getty Images

“இப்போது கஷ்டப்பட்டு உழைத்தால் தான் வாழ்க்கையில் பின்பு சந்தோசமாக இருக்கலாம்” என்பது 90கள் வரை வேலைக்கு சென்ற இளைஞர்களுக்கு சொல்லிக்கொடுக்கப்பட்டதாக இருக்கலாம்.

ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. நியாயமாக இருக்க வேண்டும், என் வேலைக்கான அங்கீகாரம் உரிய நேரத்தில் கிடைக்க வேண்டும், எனது நேரமும் திறமைகளும் மதிக்கப்பட வேண்டும் என்பது ஜென் ஜி தலைமுறையினரின் (1995-2006ம் ஆண்டுகளுக்கு இடையில் பிறந்தவர்கள்) எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

சமீபத்தில் சமூகவலைதளத்தில் ‘வேலை வேண்டாம்’ என்று நிராகரிக்க ஜென் ஜி தலைமுறையைச் சேர்ந்த ஒரு இளம்பெண் கூறிய காரணம் வைரலானது.

புதிதாக வேலை தேடும் அவரிடம் வேலை நிமித்தமாக சில நேரங்களில் சனிக்கிழமைகளிலும் பணி செய்ய வேண்டியிருக்கும் என்று நிறுவனம் தனது நிபந்தனைகளை கூறியுள்ளது.

By admin