• Sun. May 4th, 2025

24×7 Live News

Apdin News

GT vs SRH: தமிழக வீரர் சாய் சுதர்சன் சாதனை – சுப்மன் கில் ரன் அவுட் சர்ச்சையானது ஏன்?

Byadmin

May 3, 2025


சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சாய் சுதர்சன் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

2025 ஐபிஎல் டி20 சீசனில் தமிழக வீரர்கள் அதிகம் இடம் பெற்றுள்ள அணி குஜராத் டைட்டன்ஸ்.

சாய் சுதர்சன், சாய் கிஷார், ஷாருக்கான், வாஷிங்டன் சுந்தர் என அனைவருமே தமிழக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் 4 பேரும் கிடைக்கின்ற வாய்ப்பில் தங்களின் திறமையை வெளிப்படுத்தி, முத்திரை பதித்து வருகிறார்கள். அதிலும் தொடக்க வீரராகக் களமிறங்கும் சாய் சுதர்சனின் ஆட்டம் இந்த சீசனில் வெகுவாக அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மிரட்டல் ஜோடி

சாய் சுதர்சன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத் அணியின் வெற்றிக்கு தொடக்க வீரர்கள் சுப்மன் கில், சாய் சுதர்சன் ஜோடி அமைத்துக் கொடுக்கும் அடித்தளம் பல போட்டிகளில் வெற்றியைக் கொடுத்துள்ளது

இந்த சீசனில் குஜராத் கேப்டன் சுப்மன் கில்லுடன் சேர்ந்து சாய் சுதர்சன் அமைக்கும் கூட்டணி பெரும்பாலான ஆட்டங்களில் பெரிய ஸ்கோருக்கும், வெற்றிக்கும் வழிவகுத்துள்ளது.

ஆமதாபாத்தில் நேற்று நடந்த சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில்கூட இருவரின் பார்ட்னர்ஷிப்பும் குஜராத் அணி 200 ரன்களுக்கு மேல் கடக்க உதவியது. இருவரும் முதல் விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.

By admin