• Wed. Apr 9th, 2025

24×7 Live News

Apdin News

GT vs SRH முகமது சிராஜ் அசத்தல்: தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் அபாரம் – எஸ்ஆர்எச் தொடரும் தோல்வி ஏன்?

Byadmin

Apr 7, 2025


ஐபிஎல் 2025, GT vs SRH

பட மூலாதாரம், Getty Images

ஹைதராபாத்தில் நேற்று (ஏப்ரல் 6) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 19-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி.

முதலில் பேட்செய்த சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 152 ரன்களை சேர்த்தது. 153 ரன்கள் என்னும் இலக்கைத் துரத்திய குஜராத் அணி 16.4 ஓவர்களில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றி மூலம் குஜராத் அணி 4 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 6 புள்ளிகள் பெற்று ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறியது. சன்ரைசர்ஸ் அணி 5 போட்டிகளில் 4 தோல்விகளுடன், ஒரு வெற்றியுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

ஒருதரப்பாக மாறிய ஆட்டம்

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒருதரப்பாகவே அமைந்தது. கடந்த சீசனில் இருந்து அதிரடி ஃபார்முலாவை கையில் எடுத்து ஆடிவரும் சன்ரைசர்ஸ் அணிக்கு இந்த சீசனில் அந்த ஃபார்முலா வெற்றியைத் தரவில்லை.

By admin