காணொளி: H-1B விசா விதிகள் பற்றி அமெரிக்க ஊடகங்கள் சொல்வது என்ன?
திறன்சார் வெளிநாட்டு ஊழியர்களுக்கான H-1B விசா தொடர்பாக டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் பேசுபொருளாகி உள்ளது.
இனி ஒவ்வொரு புதிய H-1B விசா விண்ணப்பத்துக்கும் ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அறிவித்துள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய். இந்த விதி செப்டம்பர் 21, 2025 முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அரசு, இந்த நடவடிக்கையின் முழு தாக்கங்களையும் சம்பந்தப்பட்ட அனைவரும் ஆய்வு செய்து வருகின்றனர் என தெரிவித்துள்ளது.
சரி, டிரம்ப் அரசின் இந்த நடவடிக்கை குறித்து பிரதான அமெரிக்க ஊடகங்கள் என்ன சொல்கின்றன? முழு விவரம் காணொளியில்..
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.