• Thu. Mar 19th, 2026

24×7 Live News

Apdin News

Heart Attack| அரியானாவில் 6 ஆண்டுகளில் மாரடைப்பால் 18 ஆயிரம் இளைஞர்கள் மரணம்

Byadmin

Mar 19, 2026


அரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மாரடைப்பு காரணமாக 17 ஆயிரத்து 973 பேர் இறந்ததாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களே.

அரசின் புள்ளி விவரப்படி 2020-ம் ஆண்டில் 2,394 பேரும், 2021-ம் ஆண்டில் 3,188 பேரும், 2022-ம் ஆண்டில் 2,796 பேரும், 2023-ம் ஆண்டில் 2,886 பேரும், 2024-ம் ஆண்டில் 3,063 பேரும், 2025-ம் ஆண்டில் 3,255 பேரும் ஜனவரி 2026 ல் 391 இறப்புகள் என ஒட்டுமொத்தமாக ஜனவரி 2020 முதல் ஜனவரி 2026 வரை 17,973 இளம் வயதினர் மாரடைப்பு, இதய செயலிழப்பால் உயிரிழந்தனர். மாறிவரும் வாழ்க்கை முறைகள், மன அழுத்தம், உணவுப் பழக்கம், புகை பிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகியவை இதற்குக் காரணமாக இருக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும், உடல் உழைப்பின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவையும் காரணமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே கண்டறிவதன் மூலமும், வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் இதய சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க முடியும் என்கின்றனர் டாக்டர்கள்.

இளம் வயதினர் தவறாமல் இதயப் பரிசோதனைகளைச் செய்துகொள்ள வேண்டும், தங்கள் ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பைக் கண்காணிக்க வேண்டும், மேலும் உணவுடன் உடற்பயிற்சியும் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

By admin