• Wed. Jan 8th, 2025

24×7 Live News

Apdin News

HMPV: சீனாவில் கொரோனா போன்ற அறிகுறிகளுடன் வேகமாக பரவும் புதிய வைரஸ் – இந்தியா என்ன செய்கிறது?

Byadmin

Jan 5, 2025


HMPV வைரஸ், சீனா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

இந்த உலகம் மிகவும் கொடூரமான கொரோனா வைரஸ் நோய்தொற்றால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் முடிவடைந்துள்ளன. ஆனால் தற்போது, சீனாவில் புதிய வகை வைரஸ் நோய் பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.

இந்த புதிய வகை வைரஸ் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றது.

ஹியூமன் மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) என்று அழைக்கப்படும் இந்த வைரஸால் அதிக அளவில் நோய் பாதிப்புகள் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

“இந்த வைரஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டால், அந்த நபருக்கு சளி மற்றும் கோவிட் -19 போன்ற அதே அறிகுறிகள் தென்படும். இந்த நோய் பாதிப்பு வேகமாக பரவி வருகிறது”, என்று ஊடக செய்திகளை மேற்கோள் காட்டி பிபிசி மானிட்டரிங் பிரிவு தெரிவித்துள்ளது.

By admin