• Thu. Jan 9th, 2025

24×7 Live News

Apdin News

HMPV: தமிழ்நாட்டிலும் பரவிவிட்ட இந்த வைரஸ் கொரோனா போன்றதா? 7 கேள்விகளும் பதில்களும்

Byadmin

Jan 8, 2025


ஹெச்.எம்.பி.வி தொற்று

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சமீப வாரங்களாக சீனாவில் ஹெச்.எம்.பி.வி வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது.

இந்த வைரஸால் ஏற்படும் நோய் பாதிப்புகள் அதிக அளவில் வடக்கு சீனாவில் பதிவாகி வருகின்றன.

தமிழ்நாட்டிலும் 2 குழந்தைகளுக்கு ஹெச்.எம்.பி.வி வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு குழந்தைக்கும் சேலத்தில் ஒரு குழந்தைக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஜன. 07 வரை ஏழு பேருக்கு இந்த தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

By admin