• Fri. Jan 10th, 2025

24×7 Live News

Apdin News

Hush Money Case: அமெரிக்க அதிபராகவுள்ள டிரம்புக்கு என்ன தண்டனை? ஜனவரி 10-ம் தேதி தீர்ப்பு

Byadmin

Jan 4, 2025


டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா, தண்டனை

பட மூலாதாரம், Reuters

  • எழுதியவர், அன்னா லாம்சே
  • பதவி, பிபிசி செய்திகள்

தன்னைப் பற்றிய தகவல்களை வெளியில் சொல்லாமல் ரகசியமாக வைத்திருப்பதற்காக பணம் கொடுத்த விவகாரத்தில் (hush money), டொனால்ட் டிரம்புக்கு நியூயார்க்கில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி அன்று தண்டனை அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்க உள்ள நிலையில், இந்த உத்தரவு வந்துள்ளது.

“டிரம்புக்கு சிறைத்தண்டனை, அபராதம் போன்ற எதுவும் விதிக்கப்படாது, மாறாக இதற்கு ‘சரியான தீர்வு கண்டு வழங்கப்படும்’. அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அவர் இந்த விசாரணைக்கு நேரிலோ அல்லது காணொளி வாயிலாகவோ கலந்து கொள்ளலாம்”, என்று நியூயார்க் நீதிமன்றத்தின் நீதிபதி ஜுவான் மெர்ச்சன் உத்தரவிட்டார்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதைப் பயன்படுத்தி, டிரம்ப் தனக்கு எதிரான இந்த வழக்கை தள்ளுபடி செய்ய முயன்றார்.

நீதிபதியின் உத்தரவை “சட்டத்திற்கு புறம்பான அரசியல் ரீதியான தாக்குதல்” என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த வழக்கு “ஒரு கேளிக்கையே தவிர வேறில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

By admin