தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் அமைந்துள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உலகின் முதல் ஹைட்ரஜன் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மின்சாரத்திற்கு பதிலாக அணு உலை வெப்பத்தால் இயங்கும் ஆலையை, இந்தியாவின் அணுசக்தித் துறை நேற்று திறந்து வைத்தது.
இந்த ஆலை உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட தாமிரம்-குளோரின் வெப்பவேதியியல் சுழற்சியை பயன்படுத்தி, நீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரிக்கிறது.
இது கல்பாக்கத்தின் ஃபாஸ்ட் ப்ரீடர் சோதனை அணு உலையில் இருந்து வரும் உயர் வெப்பநிலை அணுக்கரு செயல்முறை வெப்பத்தை நேரடியாக செலுத்துகிறது.
இந்த தொழில்நுட்பம் மும்பையில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மையத்தால் வடிவமைக்கப்பட்டு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் கூட்டு பொறியியல் முயற்சியாக செயல்படுத்தப்பட்டது.