• Sun. Mar 22nd, 2026

24×7 Live News

Apdin News

Hyundai | ரூ. 5.80 லட்சத்தில் 2026 ஹூண்டாய் எக்ஸ்டர் அறிமுகம் – என்னென்ன ஸ்பெஷல்?

Byadmin

Mar 22, 2026


ஹூண்டாய் இந்தியா நிறுவனம் மேம்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் மாடல் ரூ. 5.80 லட்சம் எக்ஸ்-ஷோரூம் தொடக்க விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கான முன்பதிவு ரூ. 11,000 கட்டணத்தில் நடைபெறுகிறது.

மேம்பட்ட எக்ஸ்டர் மாடலின் பம்ப்பர்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் ரிடிசைன் செய்யப்பட்ட கிரில், புதிய டயமன்ட் கட் 15-இன்ச் அலாய் வீல்கள், விங்-டைப் ஸ்பாயிலர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் கோல்டன் பிரான்ஸ் மற்றும் டைட்டானியம் பிளாக் மேட் ஷேட்களில் கிடைக்கிறது.

புதிய காரின் கேபின் பகுதியில் புதிய டூயல்-டோன் நேவி மற்றும் கிரே தீமில் கிடைக்கிறது. 3டி கார்பன் பேட்டன் டேஷ்போர்டு ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிதாக ஃபிளாட் பாட்டம் ஸ்டீயரிங் வீல் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் மெட்டல் பெடல்கள், மடிக்கக்கூடிய டிரைவர் ஆர்ம்-ரெஸ்ட் மற்றும் மேம்பட்ட இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டுள்ளன.

அம்சங்களை பொருத்தவரை புதிய எக்ஸ்ட் மாடலில் டேஷ்கேம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே, டைப் சி ரியர் யு.எஸ்.பி. போர்ட், கனெக்ட்டெட் அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் சன்ரூஃப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் ஓ.டி.ஏ. அப்டேட்கள் உள்ளது.

இந்த காரின் பவர்டிரெய்னில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த கார் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் சி.என்.ஜி. ஆப்ஷனிலும் கிடைக்கிறது. இதில் இரட்டை சிலிண்டர் செட்டப் வழங்கப்படுகிறது.

By admin