• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

IND vs AUS பும்ரா புதிய சாதனை – கடைசி டெஸ்ட் மூன்றாவது நாளே முடிவுக்கு வருமா?

Byadmin

Jan 5, 2025


இந்தியா - ஆஸ்திரேலியா, பும்ரா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லாபுஷேன் விக்கெட்டை பும்ரா வீழ்த்திய போது புதிய மைல்கல்லை எட்டினார்.

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

சிட்னியில் நடந்துவரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 5வது மற்றும் கடைசி ஆட்டத்தில் இந்திய அணி 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறி வருகிறது.

2வது நாளான இன்று ஒரே நாளில் 15 விக்கெட்டுகள் வீழ்ந்தன. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை இன்று தொடர்ந்து மீதமிருந்த 9 விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி 2வது இன்னிங்ஸை ஆடத் தொடங்கி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்துள்ளது.

இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள் முன்னிலையோடு சேர்த்தால் 145 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

2வது நாளிலேயே 2வது இன்னிங்ஸ் தொடங்கிவிட்டது. இந்திய அணியின் முன்னிலையும் பெரிய அளவுக்கு இல்லாத பட்சத்தில் நாளையே(3-வது நாளிலேயே) ஆட்டம் முடிந்தாலும் வியப்படையத் தேவையில்லை.

By admin