• Mon. Feb 3rd, 2025

24×7 Live News

Apdin News

IND Vs ENG: அபிஷேக் சர்மாவின் ரன்களை கூட எடுக்க முடியாமல் இங்கிலாந்து தோற்றது எப்படி?

Byadmin

Feb 3, 2025


அபிஷேக் சர்மா, T 20 IND Vs ENG

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்ததைக் கொண்டாடும் அபிஷேக் சர்மா

17 பந்துகளில் அரைசதம், 37 பந்துகளில் சதம், 13 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள், 54 பந்துகளில் 135 ரன்கள், 250 ஸ்ட்ரைக் ரேட் என, மும்பையில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 02) நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டம் முழுவதும் அபிஷேக் சர்மாதான் நிரம்பியிருந்தார், அவரின் நாளாகவே நேற்று முடிந்தது.

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த கடைசி மற்றும் டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் சேர்த்தது. 248 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, 10.3 ஓவர்களில் 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

2வது அதிகபட்ச வெற்றி

இந்திய அணி டி20 போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் வித்தியாசத்தில் வென்ற 2வது போட்டி இதுவாகும். இதற்கு முன் 2023ல் நியூசிலாந்துக்கு எதிராக 168 ரன்களில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin