• Thu. Mar 5th, 2026

24×7 Live News

Apdin News

IND vs ENG: இந்தியா 253 ரன்கள் குவிப்பு – 89 ரன்கள் எடுத்த சஞ்சு சாம்சன்

Byadmin

Mar 5, 2026


சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

ஐசிசி டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 254 ரன்கள் இலக்காக இந்தியா நிர்ணயித்துள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் அதிகபட்சமாக 42 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 39 ரன்களும், சிவம் துபே 43 ரன்களும் எடுத்தனர்.

சஞ்சு சாம்சன்

பட மூலாதாரம், Getty Images

சஞ்சு சாம்சனின் இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும். அவரது விக்கெட்டை வில் ஜாக்ஸ் வீழ்த்தினார்.

ஹர்திக் பாண்ட்யா 26 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை 250 ரன்களுக்கு மேல் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.

By admin