• Mon. Aug 4th, 2025

24×7 Live News

Apdin News

Ind Vs Eng: ஓவல் டெஸ்டை 6 ரன் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் 2:2 என சமன்

Byadmin

Aug 4, 2025


இந்தியா, இங்கிலாந்து, டெஸ்ட் வெற்றி, ஓவல் டெஸ்ட்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து உடனான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. ஒரு மணி நேரத்தில் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக மாறியது. குறைந்த ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற டெஸ்ட் போட்டி என்கிற சாதனையும் இதன் மூலம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஐந்து டெஸ்ட் போட்டிகளும் கடைசி நாள் வரை சென்று முடிந்துள்ளன.

நான்காவது இன்னிங்ஸில் 374 ரன்கள் என்கிற இமலாய இலக்கை துரத்திய இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய சிராஜ் இந்த டெஸ்ட் போட்டியில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிராஜுக்கு உறுதுணையாக பிரசித் கிருஷ்ணாவும் இரு இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகள் என மொத்தம் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 4வது நாளில் கேட்சை தவறவிட்டதற்காக விமர்சிக்கப்பட்ட சிராஜ். இன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்தார்.

இதன் மூலம் இந்த தொடரை 2-2 என்கிற கணிக்கில் இந்திய அணி சமன் செய்துள்ளது. நான்காவது நாள் முடியும் வரை ஒருதலைபட்சமாக இருந்தபோட்டி இந்தியாவின் அபார பந்துவீச்சால் வெற்றியாக மாறியது.

By admin