• Fri. Jan 24th, 2025

24×7 Live News

Apdin News

IND Vs ENG: வருண் மாயஜாலம், அபிஷேக் அதிரடி – இங்கிலாந்து வியூகம் தோற்றது எப்படி?

Byadmin

Jan 24, 2025


டி20 : இங்கிலாந்து Vs இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் (வலது) உடன் வருண் சக்ரவர்த்தி (இடது)

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தியின் மாயஜாலப் பந்துவீச்சு, அபிஷேக் சர்மாவின் அதிரடியான பேட்டிங் ஆகியவற்றால் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று (ஜன. 22) நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.

பேஸ் பால் வியூகத்துக்கும், ஸ்கைபால் வியூகத்துக்கும் இடையிலான ஆட்டமாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போட்டி ஒருதரப்பாகவே முடிந்தது.

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 133 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 43 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து வென்றது.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிகமான பந்துகளை மீதம் வைத்து இந்திய அணி சேஸ் செய்துள்ளது. இதற்கு முன் 2012ம் ஆண்டு புனேயில் நடைபெற்ற டி20 போட்டியில் 13 பந்துகள் மீதமிருக்கையில், இந்திய அணி சேஸ் செய்திருந்தது, இந்த ஆட்டத்தில் 43 பந்துகள் மீதமிருக்கையில் சேஸ் செய்துள்ளது.

By admin